வடக்கு பசிபிக் கடலில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பானில் மூன்று சிறிய சுனாமி அலைகள் தாக்கியுள்ளன.
ஜப்பானின் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) மாலை 5 மணி அளவில் இவாடே மாகாணத்தின் கடலோரப் பகுதியை ஒட்டி 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில், இவாடே கடற்கரைக்குப் புதிய சுனாமி எச்சரிக்கைகளை அதிகாரிகள் விடுத்தனர். முதல் சுனாமி அலை மியாகோவை 5:37 மணிக்குத் தாக்கியது.
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி தாக்குதல்
