அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் டிசம்பர் 4ஆம் நாள் நடைபெற்ற சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக கருத்தரங்கில், அமெரிக்காவுக்கான சீனத் தூதர் சியெ ஃபெங் உரைநிகழ்த்தினார். அப்போது அவர், புதிய காலத்தில் சீன மற்றும் அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளைப் புரிந்து கொண்டு வளர்ப்பதற்காக, இரு முக்கிய பின்னணி காரணங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், முதலாவதாக இரு நாட்டு அரசுத் தலைவர்களுக்கிடையேயான அதிகமான பரிமாற்றங்கள், சீன மற்றும் அமெரிக்க உறவுகளுக்கு நெடுநோக்கு வழிகாட்டலை வழங்குகின்றன. இரண்டாவதாக, சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டம், அடுத்த 5 ஆண்டுகளில் சீனச் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு முக்கிய வரைப்படத்தை உருவாக்கியுள்ளது என்றும், மேற்கூறிய இரண்டு முக்கிய பின்னணி காரணங்கள், சீன மற்றும் அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளின் வளர்ச்சிக்கு புதிய முக்கிய வாய்ப்புகளைக் கொண்டு வந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
சர்வத்சே வர்த்தக முன்னேற்றத்துக்கான சீனக் கவுன்சில், அமெரிக்க மெரிடியன் சர்வதேச மையம் எனும் அமைப்பு ஆகியவை கூட்டாக ஏற்பாடு செய்த இந்த கருத்தரங்கில், இரு நாட்டு தொழில்துறை மற்றும் வணிகத் துறையைச் சேர்ந்த 100க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
