பதின் வயதினரின் சிந்தனை ஒழுக்க ஆக்கப்பணி குறித்து ஷி ச்சின்பிங்கின் கட்டளை

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், அண்மையில், பதின் வயதினர்களின் சிந்தனை ஒழுக்க ஆக்கப்பணி குறித்து கட்டளையிட்டார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிறகு, பதின் வயதினர்களின் சிந்தனை ஒழுக்க ஆக்கப்பணியில் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி உயர்வாக கவனம் செலுத்தி வருகின்றது. பல நடவடிக்கைகளை மேற்கொண்டு பல்வேறு துறைகளில் சாதனைகளைப் பெற்றுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய கட்டத்தில், பதின் வயதினர்களின் சிந்தனை ஒழுக்க ஆக்கப்பணிகளில், நெடுநோக்குதன்மையையும் அடிப்படைதன்மையையும் வலுப்படுத்த வேண்டும். நீண்டகால மேன்மையை நிலைநாட்டுவதற்காகவும், சோஷலிசத்தைக் கட்டமைப்பவர்களாக மாறுவதற்காகவும், பதின் வயதினர்களுக்கு அறிவூட்ட வேண்டும் என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

You May Also Like

More From Author