புதிய தொழில் துறை புரட்சிக்கான கூட்டாளி உறவு பற்றிய பிரிக்ஸ் நாடுகளின் 2024ஆம் ஆண்டு மன்றக்கூட்டம் செப்டம்பர் 10ஆம் நாள் முற்பகல் சீனாவின் சியாமென் நகரில் நடைபெற்றது. “உயர்தர கூட்டாளியுறவைக் கூட்டாக உருவாக்கி, புதிய ரக தொழிற்துறை மயமாக்க ஒத்துழைப்பின் புதிய அத்தியாயம் திறந்து வைப்பது”, நடப்பு மன்றக்கூட்டத்தின் கருப்பொருளாகும். 40 நாடுகளின் பிரதிநிதிகளும், புதிய வளர்ச்சி வங்கி, ஐ.நாவின் தொழிற்துறை வளர்ச்சி அமைப்பு, எண்ணியல் ஒத்துழைப்பு அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஒத்துழைப்புக்கான பொது கருத்து மற்றும் கூட்டு வளர்ச்சித் தேவைக்கிணங்க, புதிய ரக தொழிற்துறை மயமாக்கத்துக்கான சர்வதேச ஒத்துழைப்பு முன்மொழிவு இம்மன்றக்கூட்டத்தில் வெளியிடப்பட்டது. புத்தாக்கத்துக்கான இயக்காற்றலுக்கு முக்கியத்துவம் அளிப்பது, கார்பன் குறைந்த பசுமையான தொடரவல்ல வளர்ச்சியை நனவாக்குவது, தத்தமது தனிச்சிறப்புகளுக்குப் பொருந்திய புதிய ரக தொழிற்துறை மயமாக்கப் பாதையைத் தேடுவது முதலிய 7 முன்மொழிவுகள் இதில் இடம்பெற்றன.
புதிய ரக தொழிற்துறை மயமாக்கத்துக்கான சர்வதேச ஒத்துழைப்பு முன்மொழிவு வெளியீடு
You May Also Like
அமெரிக்க அரசு பணி நிறுத்தம் குறித்த கருத்து கணிப்பு
October 1, 2025
பொதுவான நிலையில் நிதானமான சீன-அமெரிக்க உறவு
January 14, 2025
