ஆந்திர மாநிலம் அனகாபல்லி அருகே இன்று அதிகாலை டாடாநகர் – எர்ணாகுளம் விரைவு ரயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி பயணி ஒருவர் உயிரிழந்தார்.
ரயிலின் இரண்டு ஏசி பெட்டிகள் தீயில் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
ஜார்கண்ட் மாநிலம் டாடாநகரிலிருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில், இன்று அதிகாலை சுமார் 1:00 மணியளவில் விசாகப்பட்டினம் அருகே உள்ள எலமஞ்சிலி ரயில் நிலையத்தைக் கடந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
டாடாநகர் – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் AC பெட்டியில் பயங்கர தீ விபத்து
