மலேசியாவில் நடைபெற்ற தனது கடைசி படமான ‘ஜன நாயகன்’ ஆடியோ வெளியீட்டு விழாவை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் விஜய், சென்னை விமான நிலையத்தில் ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கி நிலைதடுமாறி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மலேசியாவிலிருந்து சென்னை திரும்பிய விஜயை காண ரசிகர்கள் விமான நிலைய முனையத்தில் குவிந்திருந்தனர்.
அவர் வெளியே வந்ததும், ரசிகர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு முண்டியடித்தனர்.
பாதுகாப்பு வளையத்தையும் மீறி ரசிகர்கள் நெருங்கியதால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், தனது காரை நோக்கி சென்ற விஜய் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
உடனடியாக அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரைத் தூக்கி பிடித்து பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். நல்வாய்ப்பாக இந்த தள்ளுமுள்ளுவில் அவருக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை.
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: ரசிகர்கள் கூட்டத்தில் நிலைதடுமாறி விழுந்த நடிகர் விஜய்
