இந்திய திரையுலகையே மிரள வைக்கும் ‘வாரணாசி’ – ரிலீஸ் தேதி வெளியானது  

Estimated read time 1 min read

‘பாகுபலி’ மற்றும் ‘ஆர்ஆர்ஆர்’ (RRR) படங்களின் உலகளாவிய வெற்றிக்கு பிறகு, இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கும் அடுத்த பிரம்மாண்ட படைப்பான ‘வாரணாசி’ படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படம் புதன்கிழமை, ஏப்ரல் 7, 2027 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
முன்னதாக வாரணாசி நகரில் ‘ஏப்ரல் 7, 2027’ எனக் குறிப்பிடப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இன்று படக்குழுவினர் அதனை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.
சுமார் ₹1,300 கோடி செலவில் உருவாகும் இது, இந்தியாவின் அதிக பொருட்செலவில் எடுக்கப்படும் படமாகும்.
அதோடு, ஐமேக்ஸ் (IMAX) 1.43:1 ஃபார்மட்டில் படமாக்கப்படும் முதல் இந்தியத் திரைப்படம் இதுவாகும்.

You May Also Like

More From Author