அனுமதியின்றி தன்னுடைய பெயர், புகைப்படங்களை விளம்பரத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது எனக் கோரி நடிகை ஐஸ்வர்யா ராய், டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தனது ஒப்புதல் இல்லாமல் நிறுவனங்கள் மற்றும் இணைய தளங்கள் தன் புகைப்படங்களைப் பயன்படுத்தி விளம்பர செயலில் ஈடுபடுவதாகவும், இது தனது தனியுரிமை மற்றும் விளம்பர உரிமைகளுக்கு எதிரானது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி, செயற்கை நுண்ணறிவின் (AI) மூலம் தனது உருவத்தைப் போலக் காட்சியளிக்கும் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆன்லைனில் பரவி வருவதாகவும், சிலர் இவற்றை வணிக நோக்கத்தில் பயன்படுத்தி பணம் சம்பாதித்து வருகின்றனர் எனவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.
அனுமதியின்றி தனது பெயர், படம் பயன்படுத்தக்கூடாது என நடிகை ஐஸ்வர்யா ராய் வழக்கு
