சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ திரைப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகும்?  

Estimated read time 1 min read

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயன், ‘அமரன்’ திரைப்படத்தை தொடர்ந்து நிஜ வாழ்வின் வரலாற்று சம்பவங்களை பின்னணியாக கொண்டு நடித்த திரைப்படம் ‘பராசக்தி’.
1960-களில் தமிழகத்தில் நடந்த மொழிப்போர் போராட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தை, புகழ்பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.
டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு எதிராக ரவி மோகன் வில்லனாக நடித்திருந்தார்.
திரையரங்குகளில் வெளியானபோது இப்படம் விமர்சன ரீதியாக கலவையான கருத்துகளைப் பெற்றது.
இருப்பினும், வரலாற்றைப் பதிவு செய்த விதம் மற்றும் நடிகர்களின் நடிப்புக்காகப் பரவலாகக் கவனிக்கப்பட்டது.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி முடிந்த நிலையில், தற்போது இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகத் தயாராகி வருகிறது.

You May Also Like

More From Author