பல்கேரிய அரசுத் தலைவர் சிஎம்ஜிக்கு அளித்த சிறப்பு பேட்டி

Estimated read time 1 min read

பல்கேரியாவின் முதலாவது பெண் அரசுத் தலைவராக இலியானா யொடோவா 2026ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் நாள் பதவியேற்றார்.

2025ஆம் ஆண்டு அக்டோபரில் சீனாவில் நடைபெற்ற உலக மகளிர் உச்சிமாநாட்டில் அப்போது துணை அரசுத் தலைவராக அவர் கலந்துக் கொண்டு, சீன ஊடகக் குழுமத்திற்குச் சிறப்புப் பேட்டி அளித்தார்.

சீனாவின் நாகரிகமும், நீண்ட வரலாறும் மனிதகுலத்தின் உண்மையான செல்வங்கள் என்றும், நவீன தொழில்நுட்பத்துக்கும் தொன்மையான நாகரிகத்துக்கும் இடையே நேர்த்தியான ஒருங்கிணைப்பை சீனா நனவாக்கியுள்ளது என்றும் அவர் தனது சிறப்புப் பேட்டியில் பாராட்டினார்.

இருநாட்டு உறவின் நிலையான வளர்ச்சி பற்றி ஆக்கப்பூர்வமாக மதிப்பிட்ட அவர், இரு தேசங்கள் ஒன்றுக்கு ஒன்று புரிந்து கொண்டு கூட்டு செழுமையை நனவாக்க முடியும் என்பதை பல்கேரிய-சீன உறவு நிரூபித்துள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்னெடுப்பு, சீனாவுக்கும் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு ஆகிய கட்டுக்கோப்புக்குள், விவசாயம், புதிய எரிசக்தி, தொலை தொடர்பு, வாகனத் தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் சீனாவும் பல்கேரியாவும் தொடர்ந்து ஒத்துழைப்பு மேற்கொண்டு வருவதுடன், இருநாட்டு வர்த்தகமும் அதிகரித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், சீனா-ஐரோப்பா இடையேயான தொடர்புகள் முன்பை விட உறுதியுடனும் நிலையாகவும் இருப்பதை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author