வள்ளலார் சர்வதேச மையம் திட்டம் கைவிடப்பட்டது – அறநிலையத் துறை தகவல்

Estimated read time 0 min read

வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

கடவுள் ஒருவரே! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்! என்ற உயர்ந்த ஆன்மீகக் கோட்பாட்டை உலகிற்கு அறிவித்தவர் வள்ளலார். அவர் தோற்றுவித்த சத்ய ஞான சபையில் மாத பூச வழிபாட்டிற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், தைப்பூசத் திருநாளன்று லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருவார்கள். வள்ளலார் அவர்கள் தைப்பூசத் திருநாளில் முக்தியடைந்தார். இறைவன் ஒளிமயமானவன் என்பதை உ உணர்த்தும் வகையிலேயே தைப்பூசத் திருநாளில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. தைப்புசத் திருநாளன்று உலகம் முழுவதிலுமிருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வடலூருக்கு வருகை தந்து அருட்பெருஞ்ஜோதியை தரிசிக்க தன்னெழுச்சியாகக் கூடுவார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவதைக் கண்டு, வள்ளலாரின் பொதுமை நோக்கத்தின் மீது அளவு கடந்த பற்றுகொண்ட வடலூர் பார்வதிபுரம் பகுதி மக்கள் வள்ளலாருக்கு தானமாக கொடுத்த நிலம்தான் 100 ஏக்கர் வடலூர் பெருவெளியாகும்.

பெருவெளியில், வள்ளலார் தர்மசாலை நிறுவப்பட்ட இடத்தில் ரூ.200 கோடியில் வள்ளலார் சர்வதேச மையத்தை அமைக்கப்படும் என திமுக அரசு அறிவித்தது. பெருவெளியில் ரூ.100 கோடி ரூபாய் செலவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க ஒப்புதல் அளித்து, தமிழக அரசு 2023ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. இதனை எதிர்த்த வழக்கில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை கூறியுள்ளது.

You May Also Like

More From Author