3 நாட்களில் ஆப் டெவலப்பர் ஆகலாம்; தமிழக அரசின் சூப்பர் பயிற்சி  

Estimated read time 1 min read

தமிழக இளைஞர்களைத் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தவும், அவர்களைச் சிறந்த தொழில்முனைவோராக மாற்றவும் தமிழ்நாடு அரசு ஒரு சிறப்பான திட்டத்தை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெறும் மூன்றே நாட்களில் மொபைல் ஆப்ஸ்களை உருவாக்குவது எப்படி என்பதற்கான சிறப்புப் பயிற்சியை வழங்க உள்ளது.
சென்னையில் உள்ள இந்த அரசு நிறுவனத்தின் வளாகத்தில், வரும் பிப்ரவரி 4-6 வரை இந்த மூன்று நாள் முழுநேரப் பயிற்சி நடைபெற உள்ளது.
பொதுவாக ஒரு ஆப்பை உருவாக்கப் பல மாதங்கள் மற்றும் கடினமான புரோகிராமிங் அறிவு தேவைப்படும்.
ஆனால், இந்தப் பயிற்சியில் ‘நோ-கோடு’ (No-Code) மற்றும் ‘லோ-கோடு’ (Low-Code) கருவிகளைப் பயன்படுத்தி, எளிய முறையில் ஆப் உருவாக்குவது கற்றுத்தரப்படும்.

You May Also Like

More From Author