கொழும்புவின் சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 2026 ஐசிசி டி20 உலகக்கோப்பையின் தொடக்க ஆட்டத்தில், நெதர்லாந்து அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி, பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கத்தால் 19.5 ஓவர்களில் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
148 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான், ஒரு கட்டத்தில் விக்கெட்டுகளைத் தொடர்ந்து இழந்து தடுமாறினாலும், இறுதியில் 19.3 ஓவர்களில் 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
டி20 உலகக்கோப்பை 2026: நெதர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் திரில் வெற்றி
