ஈரான் மீதான அமெரிக்காவின் புதிய சுற்றுத் தடை குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி அனுப்பிய கடிதத்தை ஐ.நா பெற்றுள்ளதாகவும், ஈரானின் கோரிக்கையின்படி, ஐ.நா. பாதுகாப்பு அவை மற்றும் ஐ.நா பொதுப் பேரவையிடம் இக்கடிதம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா பொதுச் செயலாளரின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் 27ஆம் நாள் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இப்பகுதியின் நிலைமையை மேலும் தீவிரமாக்கும் புதிய நடவடிக்கைகள் மற்றும் கூற்றுகளில் ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரேஸ் கவனம் செலுத்தி, நிரந்தர தீர்வு காண்பதற்குப் பேச்சுவார்த்தை ஒன்றே சரியான வழிமுறையாகும் என்றும் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.
