FIFA உலக கோப்பை கால்பந்து தொடர் – அர்ஜென்டினா,இங்கிலாந்து அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேற்றம்!

Estimated read time 1 min read

FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா,இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. காலிறுதி ஆட்டம் ஒன்றில் சுவிட்சர்லாந்து அர்ஜெண்டினா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டிருந்தன. இதனையடுத்து கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அப்போது அர்ஜெண்டினா அணி இரு கோல்கள் அடித்து 3-1 என்ற கோல்க்கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

மற்றொரு ஆட்டத்தில் நார்வேயை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

FIFA தரவரிசையில் இடம்பிடித்த முதல் 4 அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேற்றியுள்ளது.

ஜூலை 15-ஆம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதியில் பிரான்ஸ் அணியை எதிர்கொள்கிறது ஸ்பெயின்.

ஜூலை 16-ஆம் நடைபெறும் மற்றொரு அரையிறுதியில் இங்கிலாந்தை அர்ஜெண்டினா எதிர்கொள்கிறது.

You May Also Like

More From Author