விண்வெளி வீரர்களுக்கு ஜாக்பாட்: நிலவுக்கு ஐபோன் கொண்டு செல்ல நாசா அனுமதி  

Estimated read time 1 min read

நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் விண்வெளி ஆய்வு வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளார்.
இதன்படி, வரவிருக்கும் ‘க்ரூ-12’ (Crew-12) மற்றும் ‘ஆர்ட்டெமிஸ் II’ (Artemis II) விண்வெளிப் பயணங்களில் விண்வெளி வீரர்கள் ஐபோன் மற்றும் நவீன ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பல தசாப்தங்களாக பின்பற்றப்பட்டு வந்த கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்தி, நவீன தொழில்நுட்பத்தை விண்வெளிக்கு கொண்டு செல்வதன் மூலம், நிலவு பயணத்தின் வரலாற்று தருணங்களை மிக துல்லியமாக படம்பிடிக்க இந்த முடிவு வழிவகை செய்யும்.
ஆர்ட்டெமிஸ் II நிலவு பயணத்தில் ஈடுபடும் வீரர்கள் நவீன ஸ்மார்ட்போன்களை கொண்டு செல்ல நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளார்.

You May Also Like

More From Author