கோஸ்டாரிகா அரசுத் தலைவருக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து

கோஸ்டாரிகா அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட லாரா பெர்னாண்டஸ் அம்மையாருக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் பிப்ரவரி 5ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது ஷி ச்சின்பிங் கூறுகையில், சீன-கோஸ்டாரிகா தூதாண்மை உறவு நிறுவப்பட்ட கடந்த 18 ஆண்டுகளாக, இரு தரப்புறவு உயர்வேக வளர்ச்சியடைந்து வருகிறது. பல்வேறு துறைகளிலுள்ள ஒத்துழைப்புகள் செழுமையான சாதனைகளைப் பெற்று, இரு நாட்டு மக்களின் நன்மைகளை அதிகரித்துள்ளன என்றார். மேலும், அரசுத் தலைவர் பெர்னாண்டஸுடன் நெடுநோக்கு தொடர்புகளை வலுப்படுத்தி, ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கையை ஆழமாக்கி, பல்வேறு துறைகளிலுள்ள ஒத்துழைப்புகளை ஆக்கமுடன் முன்னேற்றி, ஒரே சீனா என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இரு நாட்டுறவின் வளர்ச்சிக்கு வழிக்காட்ட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author