நிதியமைச்சர் சொல்ல வந்ததை கமல்ஹாசன் தவறாக புரிந்து கொண்டார் – அண்ணாமலை..!

Estimated read time 0 min read

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஸ்ரீ சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் தரிசனம் செய்த பிறகு நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:

கமல்ஹாசன் ஐயாவை பொறுத்தவரை, ஒரு நல்ல நடிகர் அதில் மாற்றுக் கருத்து இல்லை. கன்னி பேச்சு எங்கள் எல்லோருக்கும் வருத்தம். நிதியமைச்சர், இன்னொருவர் பேசியதை குறிப்பிட்டு அவர்கள் இந்த மாதிரி பேசுகிறார்கள் என்பதை கூறினார். நிதி அமைச்சர் சொல்லவந்ததை கமல்ஹாசன் தவறாக புரிந்து கொண்டு பேசுவது எங்க எல்லோருக்கும் வருத்தம் தான்.

இது பார்லிமென்டில் கமலஹாசன் பார்வைக்கு சென்ற பிறகு நிச்சயமாக, தன்னை திருத்தி நான் நிதி அமைச்சரை புரிந்து கொண்டு, தவறாக பேசியதாக சொல்லுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

You May Also Like

More From Author