சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற 80ஆவது ஆண்டு நினைவுக் கூட்டத்தில் பங்கேற்கும் பொருட்டுச் சீனாவுக்கு வருகை தந்துள்ள வியட்நாம் அரசுத் தலைவர் லுவாங் குவாங்கைச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செப்டம்பர் 4ஆம் நாள் காலை பெய்ஜிங் மாமண்டபத்தில் சந்தித்துரையாடினார்.
அப்போது ஷிச்சின்பிங் குறிப்பிடுகையில், சீனாவும் வியட்நாமும் வரலாற்றை நினைவில் கொண்டு தொலைநோக்கு ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றார். மேலும், வியட்நாமுடன் இணைந்து, தெற்குலக கூட்டு நன்மைகளைப் பேணிக்காத்து உலகத்துக்கு மேலதிக ஆக்கப்பூர்வமான சக்தியைக் கொண்டு வரச் சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். சீனாவுடனான ஒற்றுமையை மேலும் நெருக்கமாக்கி ஒன்றுக்கொன்று ஆதரவளித்து ஆட்சி முறையிலான அனுபவங்களின் பரிமாற்றத்தை வலுப்படுத்த விரும்புவதாக லுவாங் குவாங் கூறினார்.