வேட்பாளர் அறிமுக விழாவில் விஜய் அதிரடி பேச்சு  

Estimated read time 0 min read

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகக் கருதப்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது.
234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்துப் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், ஆளும் திமுக அரசையும் அதன் கூட்டணிக் கட்டமைப்பையும் மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார்.
இந்தத் தேர்தல் வெறும் வாக்குப்பதிவு அல்ல, “அதிகார மமதை கொண்ட ஒரு குடும்பத்திற்கும் பாமர மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம்” எனப் பிரகடனப்படுத்தினார்.
“தமிழகத்தில் இப்போது நடப்பது இருமுனைப் போட்டிதான். மக்கள் கூட்டணியான நமக்கும், ஸ்டாலின் சார் கூட்டணிக்கும் இடையேதான் நேரடிப் போட்டி. அவர்களின் கூட்டணி உடைந்த கண்ணாடியை ஒட்ட வைத்தது போன்ற ஒட்டுப்போட்ட கூட்டணி” என்று விஜய் சாடினார்.

You May Also Like

More From Author