தமிழகத்தின் சமையலறைகளில் நீங்கா இடம்பெற்றுள்ள ‘உதயம்’ (Udhaiyam) பருப்பு மற்றும் மளிகைப் பொருட்கள் பிராண்டை, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புரோடக்ட்ஸ் (RCPL) நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.
தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘உதயம் அக்ரோ ஃபுட்ஸ்’ நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்கியுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் நேற்று (டிசம்பர் 18) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த ஒப்பந்தத்தின்படி, ரிலையன்ஸ் நிறுவனம் பெரும்பான்மை பங்குகளையும், உதயத்தின் தற்போதைய உரிமையாளர்கள் சிறுபான்மை பங்குகளையும் வைத்திருப்பார்கள்.
நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளர்களான எஸ். சுதாகர் மற்றும் எஸ். தினகர் ஆகியோர் தொடர்ந்து நிர்வாகத்தில் பங்கு வகிப்பார்கள்.
தமிழகத்தின் அடையாளமான ‘உதயம்’ பிராண்டை வாங்கியது ரிலையன்ஸ்
