2026ஆம் ஆண்டு வசந்த விழா கொண்டாட்ட கலை நிகழச்சியின் 4வது ஒத்திகை

Estimated read time 1 min read

 

சீன ஊடகக் குழுமம் தயாரித்த 2026ஆம் ஆண்டு வசந்த விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சியின் 4வது ஒத்திகை பிப்ரவரி 8ஆம் நாள் வெற்றிகரமாக நடைபெற்றது.

பாரம்பரிய பண்பாட்டுக்கான புத்தாக்கம், சீனா மற்றும் வெளிநாட்டுக் கலைகளின் ஒன்றிணைப்பு முதலியவற்றைக் கொண்ட இந்தக் கலை நிகழ்ச்சி, சீனாவின் தலைச்சிறந்த பண்பாட்டின் அடிப்படையில், பல்வேறு நாகரிகங்களுக்கிடையிலான ஒன்றிணைப்பின் அழகை வெளிப்படுத்துகின்றது. சீனர்களும் வெளிநாட்டவர்களும் இந்தக் கலை நிகழ்ச்சியின் மூலம் சீன வசந்த விழாவின் கோலாகலமான சூழ்நிலையை உணர்ந்து கொண்டு, மகிழ்ச்சி நிறைந்த குதிரை ஆண்டைக் கூட்டாக வரவேற்கின்றனர்.

You May Also Like

More From Author