அயோத்தியில் உள்ள ராமர் கோயில் புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் தொடங்கி இரவு 11 மணி வரை 19 மணி நேரம் திறந்திருக்கும்.
மேலும், நான்கு ‘போக’ பிரசாதத்தின் போது தலா ஐந்து நிமிடங்கள் அந்த கோயிலின் திரைச்சீலைகள் இறைவனுக்காக மூடப்பட்டிருக்கும்.
கும்பாபிஷேகத்திற்குப் பிறகு அயோத்தியில் நடைபெறும் முதல் ராம நவமியை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதைக் கருத்தில் கொண்டு இது செய்யப்படுகிறது.
ராமர் கோவிலில் தரிசனம் செய்வதற்காக வரும் சிறப்பு விருந்தினர்கள் ஏப்ரல் 19 ஆம் தேதிக்குப் பிறகு மட்டுமே அயோத்திக்கு வர வேண்டும் என்று ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது.