சூர்யாவின் ‘சீன்’ படத்திற்குக் கிடைத்த மிரட்டலான வரவேற்பு..!!! 

Estimated read time 1 min read

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சூர்யா நடிப்பில், தீபாவளி பண்டிகையைக் குறிவைத்துத் திரையரங்குகளில் களமிறங்கிய ‘சீன்’ திரைப்படம் வெளியான நாள்முதல் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் இதுவரை இல்லாத அளவுக்கு மாபெரும் சாதனைகளை நிகழ்த்தித் திரையுலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மலையாளத் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநரான ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், தமிழ் சினிமா உலகில் ஒரு புதிய அலையை ஏற்படுத்தியுள்ளதுடன், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை எற்படுத்தி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சூர்யாவின் அசாத்தியமான நடிப்பு மற்றும் அதிரடியான திரைக்கதை அமைப்பு ஆகியவை ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளதால், திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

தீபாவளித் திருநாளை முன்னிட்டு கடந்த நவம்பர் 6-ம் தேதி வெளியான இப்படம், ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், படத்தின் முதல் மூன்று நாட்களுக்கான அதிகாரப்பூர்வ வசூல் விவரங்கள் தற்போது வெளியாகித் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அதன்படி, வெளியான முதல் மூன்று நாட்களுக்குள் உலக அளவில் இப்படம் 145 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை வசூலித்து மாபெரும் சாதனை படைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கடந்த நவம்பர் 8-ம் தேதி மட்டும் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான காட்சிகளில் திரையிடப்பட்ட இப்படம் கோடிக்கணக்கில் வசூலைக் குவித்து பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத்தைக் கதி கலங்க வைத்துள்ளது.

தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டங்கள் இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், திரையரங்குகளில் குடும்பங்கள் மற்றும் இளைஞர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வரும் நாட்களில் வசூல் மேலும் பல மடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டில் சூர்யா நடிப்பில் வெளிவந்த மற்ற திரைப்படங்களைக் காட்டிலும் ‘சீன்’ திரைப்படம் மிகக் குறுகிய காலத்திற்குள் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வணிக ரீதியாகவும் இமாலய வெற்றியை நோக்கித் பயணிக்கிறது.

உலகெங்கிலும் உள்ள தமிழ்சினிமா ரசிகர்களின் பேராதரவுடன் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளைத் தலைகீழாக மாற்றி வரும் இந்த அதிரடித் திரைப்படத்தின் வெற்றிப் பயணம் இந்தியத் திரையுலகின் கவனத்தை மீண்டும் ஒருமுறை சூர்யாவின் பக்கம் திருப்பியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author