மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஊஞ்சல் தாலாட்டு வைபவம்

வந்தவாசி அடுத்த மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஊஞ்சல் தாலாட்டு வைபவம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் மூல மூர்த்திகளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தேறியது.

பிறகு சக்தி உபாசகர் அருட்சக்தி ஆறு. லட்சுமணன் ஸ்வாமிகள் முன்னிலையில் பூஜைகள் நடைபெற்றன.பிறகு மகா தீபாராதனையும் நடந்தேறியது. மாலை உற்சவ மூர்த்தி அம்மன் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிறகு மேளதாளத்துடன் ஊஞ்சல் தாலாட்டு வைபவம் நடைபெற்றது.

மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

You May Also Like

More From Author