ஜப்பானில் பிரதமர் சனே தகாய்ச்சியின் எல்டிபி கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் – கருத்துக்கணிப்பில் தகவல்!

Estimated read time 0 min read

ஜப்பானில் பிரதமர் சனே தகாய்ச்சியின் எல்டிபி கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் பிரதமராக பொறுப்பேற்ற சனே தகாய்ச்சி, தனக்கு இருக்கும் ஆதரவை பயன்படுத்தி ஆளும் கட்சியின் பலத்தை அதிகரிக்க திட்டமிட்டார். இதற்காக பதவி காலத்திற்கு முன்பே ஜப்பான் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தார். இதையடுத்து ஜப்பானில் உள்ள 465 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில், பிரதமர் சனே தகாய்ச்சியின் எல்டிபி மற்றும் அதன் கூட்டணி கட்சியான ஜப்பான் இனோவேஷன் கட்சியியும் சுமார் 300 இடங்களுக்கு அதிகமான இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author