‘லாக் அண்ட் லோடட்’ நிலையில் அமெரிக்கா;ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் போர் என எச்சரிக்கை  

Estimated read time 1 min read

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், அணு ஆயுத ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானுக்கு எதிராக மீண்டும் போரைத் தொடங்க அமெரிக்கா ‘லாக் அண்ட் லோடட்’ தயார் நிலையில் இருப்பதாக அந்நாட்டுத் துணை அதிபர் ஜேடி வான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானுக்கு ஒப்பந்தம் செய்ய இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்த சில மணி நேரங்களில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
அமெரிக்கா ஏற்கனவே ஈரான் மீது புதிய வான்வழித் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டு, அதற்கான அனுமதியை வழங்க தான் வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே தூரத்தில் இருந்ததாக அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் வெளிப்படுத்தியுள்ளார்.

You May Also Like

More From Author