தேசிய பொருளாதாரம் மே மாதம் தொடர்ந்து மீட்சி

சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் 15ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, மே திங்களில் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் அதிகரிப்பு தொகை, கடந்த ஆண்டில் இருந்ததை விட 3.5 விழுக்காடு அதிகமாகும்.

சேவைத் தொழிற்துறையின் உற்பத்தி குறியீடு கடந்த ஆண்டை விட 11.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. சரக்குகளின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை 3 இலட்சத்து 44 ஆயிரத்து 600 கோடி யுவானாகும்.

இது கடந்த ஆண்டை விட 0.5 விழுக்காடு அதிகமாகும்.
கணக்கெடுப்பின் மூலம், மே திங்களில் நாடளவில் நகரங்களின் வேலை வாய்ப்பில்லா விகிதம் 5.2 விழுக்காடாகும். வேலை வாய்ப்பு நிலைமை பொதுவாக நிதானமாக உள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author