அமெரிக்க மிரட்டலுக்கு பணியாத ஈரான்; ஓமான் பேச்சுவார்த்தையில் நீடிக்கும் இழுபறி  

Estimated read time 0 min read

அமெரிக்காவின் ராணுவ மிரட்டல்கள் மற்றும் புதிய பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும், தனது யுரேனியம் செறிவூட்டும் திட்டத்தை கைவிட போவதில்லை என்று ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ஓமானில் இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளுக்கு பிறகு பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, அமெரிக்காவின் நோக்கங்கள் குறித்து தனது ஆழ்ந்த சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் அரக்சி, “யுரேனியம் செறிவூட்டல் என்பது ஈரானின் இறையாண்மை சார்ந்தது; இதில் எவரும் எங்களுக்குக் கட்டளையிட முடியாது. போர் திணிக்கப்பட்டாலும் இந்தத் திட்டத்தை நாங்கள் கைவிடப் போவதில்லை,” என்று கூறினார்.
பிராந்தியத்தில் அமெரிக்கா தனது விமானம் தாங்கி போர்க்கப்பல்களை நிலைநிறுத்தி மிரட்டுவதை ஈரான் கண்டு அஞ்சவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

You May Also Like

More From Author