‘குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள்’ – பெற்றோர்களுக்குப் பிரதமர் மோடி வேண்டுகோள்  

Estimated read time 0 min read

அசாம் மாநிலம் குவஹாத்தியில் நடைபெற்ற பரிக்ஷா பே சர்ச்சா 2026 நிகழ்வில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.
அப்போது ஒரு மாணவர், “பெற்றோர்கள் எங்களை நண்பர்கள் அல்லது உடன்பிறந்தவர்களுடன் ஒப்பிடும்போது ஏற்படும் அழுத்தத்தை எப்படி கையாள்வது?” என்று கேட்டார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர், “பெற்றோர்கள் உங்கள் சகோதரியின் கையெழுத்து நன்றாக இருப்பதாகக் கூறினால், அதை ஒரு அழுத்தமாகப் பார்க்காமல், உங்களை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாகக் கருதுங்கள்,” என்றார்.
“சுட்டிக்காட்டியதற்கு நன்றி, நான் இன்னும் சிறப்பாகச் செய்ய முயற்சிப்பேன்” என்று நேர்மறையாகப் பதிலளிப்பது மன அழுத்தத்தைத் தணிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

You May Also Like

More From Author