2026ஆம் ஆண்டு சர்வதேச அணு அறிவியல் ஒலிம்பியாட் போட்டி 8ஆம் நாளிரவு சவுதி அரேபியாவிலுள்ள ஜிடா நகரில் முடிவடைந்தது.
இந்தப் போட்டியில் முதல் முறையாகப் பங்கெடுத்த சீன அணியைச் சேர்ந்த 4 பிரதிநிதிகள் மொத்தம் ஒரு தங்கம் மற்றும் 3 வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.
சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் ஏற்பாட்டில், உலகளவில் அணு அறிவியலை மையமாகக் கொண்டு பன்னாட்டு இளைஞர்களுக்காக நடத்தப்பட்ட முதலாவது ஒலிம்பியாட் போட்டி இதுவாகும்.
நடப்புப் போட்டியில் 19 நாடுகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. 8 நாட்களில், அணுப் பொருளியல், கதிர்வீச்சு பாதுகாப்பு,அணு எரிப்பொருள் ஆகியவை பற்றி தத்துவம் மற்றும் ஆய்வுத் தேர்வுகள் நடைபெற்றன.
