‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து பிரகாஷ் ராஜ் வெளியேற்றம்?  

Estimated read time 1 min read

இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் நடிகர் பிரபாஸ் கூட்டணியில் உருவாகி வரும் ‘ஸ்பிரிட்’ திரைப்படத்தில் இருந்து பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே நடிகை தீபிகா படுகோன் இப்படத்தில் இருந்து வெளியேறிய நிலையில், தற்போது பிரகாஷ் ராஜும் விலகியிருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட மோதலே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் ‘ஸ்பிரிட்’ படப்பிடிப்பின் போது, ஒரு குறிப்பிட்ட காட்சி மற்றும் திரைக்கதை தொடர்பாக இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவுக்கும் பிரகாஷ் ராஜுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இந்த முரண்பாடுகள் முற்றிய நிலையில், பிரகாஷ் ராஜ் அந்த படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author