போஹாய் கடலில் சீனாவின் முதலாவது 10 ஆயிரம் கோடி கன மீட்டர் இயற்கை எரிவாயு படிவுடைய போஹோங் 19-6 எரிவாயு களத் திட்டப்பணியின் முதல் கட்டம், பன்முகங்களிலும் உற்பத்தியில் இறங்கியது என்று சீன தேசிய கடல்சார் எண்ணெய் நிறுவனம் ஆகஸ்ட் 9ஆம் நாள் அறிவித்தது. அதன் தினசரி எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி அளவு 5200 டன்னுக்கு மேலாகும்.
போஹாய் கடலின் மத்தியில் அமைந்துள்ள இந்த எரிவாயுக் களத்தில் 20 ஆயிரம் கோடி கன மீட்டர் இயற்கை எரிவாயு இருப்பும், 20 கோடி கன மீட்டர் திரவ எண்ணெய் இருப்பும் உள்ளதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதுவரை, சீனாவின் கடல் புதைந்த மலை அடுக்குகளில் இருந்து வரும் மொத்த எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி அளவு, 60 இலட்சம் டன்னை தாண்டியுள்ளது. இதன் வளர்ச்சித் திறன் தெளிவாக உயர்ந்துள்ளது இது காட்டுகிறது.
