வாரணாசி படத்தில் மகேஷ் பாபுவின் ‘ருத்ரா’ தோற்றம் வெளியீடு; ராஜமௌலியின் பிரம்மாண்டம்  

Estimated read time 0 min read

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் வாரணாசி திரைப்படத்தில் நடித்து வரும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ருத்ரா கதாபாத்திரத்தின் புதிய அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் புகைப்படங்களைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்தத் திரைப்படத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா கதாநாயகியாகவும், நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் வில்லனாகவும் நடிக்கின்றனர்.
ஆப்பிரிக்கக் காடுகளின் பின்னணியில் கம்பீரமாக எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றுத் திகழ்கின்றன.

You May Also Like

More From Author