புல்வாமா தாக்குதலின் 7ம் ஆண்டு நினைவு நாள் – நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

Estimated read time 0 min read

புல்வாமா தாக்குதலின் 7ம் ஆண்டு நினைவு நாள் இன்று (பிப்., 14) அனுசரிக்கப்படுகிறது.

கடந்த 2019ம் ஆண்டு இதே நாளில் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த துயர சம்பவத்தில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தை யாராலும் மறக்க முடியாது.

இந்நிலையில் இன்று நினைவு நாளையொட்டி சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2019ம் ஆண்டு இதே நாளில் புல்வாமாவில் தங்கள் இன்னுயிரை ஈந்த துணிச்சலான வீரர்களை நினைவு கூர்கிறேன்.

அவர்களது தேசத்திற்கான சேவை நம் உணர்வில் என்றும் பதிந்திருக்கும். ஒவ்வொரு இந்தியர்களும் அவர்களின் துணிச்சலை கண்டு உத்வேகம் பெறுகின்றனர்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

You May Also Like

More From Author