ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் – அதிகம் பலன் அடைந்த தமிழகம்!

Estimated read time 0 min read

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் தமிழகம் அதிக பயனடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது,

தமிழகம் உட்பட நாடு முழுவதும் வசிக்கும் பலர் பணி நிமித்தம் காரணமாக பல்வேறு மாநிலங்களில் வசிக்கின்றனர். அவ்வாளு இடம்பெயரும் தொழிலாளர்கள் பயன்பெற மத்திய அரசு ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை கடந்த 2020 ஜனவரியில் தொடங்கியது.

இத்திட்டதின்கீழ், எந்த மாநிலத்தைச் சேர்ந்த முன்னுரிமை மற்றும் அந்தியோதயா பிரிவு ரேஷன் கார்டுதாரர்கள், தாங்கள் வசிக்கும் மாநில ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமையை வாங்கிக் கொள்ளலாம்.

இத்திட்டம் மாநில அரசின் உரிமைகளை பறிப்பதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பயன்பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக ரேஷன் கார்டுதாரர்களில் இம்மாதத்தில் நேற்று வரை 667 பேரும், ஜனவரியில் 595 பேரும், டிசம்பரில் 667 பேரும், பிற மாநிலங்களில் பொருட்கள் வாங்கியுள்ளனர்.

அதேபோல் தமிழகத்தில் வசிக்கும் வட மாநிலங்களை சேர்ந்தவர்களில் இம்மாதத்தில் இதுவரை 71 பேரும், ஜனவரியில் 55 பேரும், டிசம்பரில் 71 பேர் மட்டுமே பொருட்களை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author