உலகளவில் தங்கம் விலை நாளுக்கு நாள் மாற்றம் கண்டு வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ. 57 ஆயிரமாக இருந்த சவரன் விலை தற்போது ரூ. 1 லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இதற்கு சர்வதேச அளவிலான போர் பதற்றங்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மை, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பில் ஏற்பட்டுள்ள பதற்றங்கள் போன்றவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகின்றன.
கடந்த மாதத்தில் அமெரிக்க – கிரீன்லாந்து போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 5 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்து நகைப் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இனிமேல் விலையேற்றம் இதேபோன்றுதான் இருக்குமா? என்ற கேள்விகள் எழுந்த நிலையில், மத்திய பட்ஜெட் மற்றும் அமெரிக்க வங்கி வட்டி விகித மாற்றங்கள் காரணமாக, தங்கம் விலை சமீப நாட்களாக ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.
கடந்த 2 நாள்களில் சவரனுக்கு ₹3,120 குறைந்த தங்கம், காதலர் தினமான இன்று மீண்டும் உயரத் தொடங்கியதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை அதிகரிப்பதால் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று (பிப்.14) தங்கம் விலை உயர்ந்துள்ளது. 22K ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 14,560க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,16,480க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.280க்கும், ஒரு கிலோ ரூ.2,80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட அனைத்துப் பள்ளிகளுக்கும் அக்டோபர் 5 மற்றும் 6 ஆகிய இரண்டு [மேலும்…]
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்கள் ஏற்கும் வகையில் உரிய நடைமுறையை வகுக்கும்படி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன் தாக்கல் செய்த [மேலும்…]
அரசியல் மாநாடு போல் சென்னை போரூரில் நடிகர் சிவகார்த்திகேயனின் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் மூலம் [மேலும்…]
உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில், சாலை வளைவில் கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்தில் மோதி சுமார் 100 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்த சம்பவம் [மேலும்…]
சர்வதேச அளவில் அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சித் துறையில் நிகழ்த்தப்படும் மிகச்சிறந்த சாதனைகளுக்கான ஆண்டின் உச்சபட்ச விருதான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், [மேலும்…]
சீன அரசின் அனுமதியின்றி பிலிப்பைன்ஸின் சி208 விமானம் ஒன்று அக்டோபர் 3ஆம் நாள் சீனாவின் ஹுவாங்யான் தீவின் வான் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்தது. சீன [மேலும்…]
சீனாவின் தேசிய விடுமுறை காலத்தின் முதல் பாதியில் நாட்டின் நுகர்வு சந்தை சீராகவும் ஒழுங்காகவும் இயங்கி வருவதாகவும், பல்வேறு இடங்களிலும் வாழ்க்கைக்குத் தேவையான தயாரிப்புகளின் [மேலும்…]