கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் உபரிநீரின் அளவு 51 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் கபினி மற்றும் கே.ஆர்.எஸ். ஆகிய இரு அணைகளில் இருந்து தமிழகத்திற்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், மழையின் அளவு தற்போது குறைந்ததால், அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 51 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. 284 அடி உயரம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 281.46 அடியாகவும், அணையில் இருந்து நீர் திறப்பு 20 ஆயிரம் கனஅடியாகவும் உள்ளது.
இதேபோல், 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் தற்போது 121.15 அடியாகவும், நீர் திறப்பு 31 ஆயிரம் கனஅடியாகவும் உள்ளது.