இஸ்ரேல் நாட்டுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புதன்கிழமை அன்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில், Knesset-ல் உரையாற்றினார்.
அப்போது, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் ‘Zero Tolerance’ கொள்கையை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
2023, அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலை குறிப்பிட்ட பிரதமர், “அந்தக் கொடூரமான தாக்குதலில் உயிரிழந்த ஒவ்வொரு உயிருக்கும் எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். உங்களது வலியை நாங்களும் உணர்கிறோம், உங்கள் துக்கத்தில் இந்தியாவும் பங்கு கொள்கிறது. எந்தவொரு காரணத்திற்காகவும் பொதுமக்களின் கொலையை நியாயப்படுத்த முடியாது,” என்று ஆவேசமாக பேசினார்.
மேலும், மும்பை 26/11 தாக்குதலையும் நினைவு கூர்ந்த அவர், பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக உரையாற்றிய பிரதமர் மோடி
