இந்திய உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டில் அரசு நிறுவனமான டாஸ்மாக் நடத்தும் மதுபானக் கடைகளில் சோதனைகளை நடத்துவதில் அமலாக்கத்துறை ஆக்ரோஷமாகமாக நடந்து கொள்வதாக கடுமையாக விமர்சித்துள்ளது.
மேலும் அந்த அமைப்பின் நடவடிக்கைகள் அனைத்து வரம்புகளையும் மீறுவதாக இருப்பதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
வியாழக்கிழமை (மே 22), தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் வெளியிட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டது.
கடந்த மார்ச் மற்றும் மே மாதங்களில் மாநிலத்தின் ஏகபோக மதுபான விற்பனையாளரான டாஸ்மாக் உடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை எல்லை மீறி செயல்படுவதாக உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
