தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ (JACTO-GEO), வரும் ஜனவரி 6-ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.
அரசுடன் நடத்தப்பட்ட சமரச பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் நேற்று அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருடன் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
பல மணி நேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில், ஊழியர்களின் அடிப்படை கோரிக்கைகள் குறித்து அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த நிர்வாகிகள், போராட்டத்தை தீவிரப்படுத்தத் தீர்மானித்துள்ளனர்.
தமிழக அரசுக்கு நெருக்கடி: ஜனவரி 6 முதல் ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தம்
