சீன ரயில்வே குழுமம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் பாதியில் சீனாவில் ரயில் மூலம் 234 கோடியே 80 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 5 சதவீதம் அதிகரித்து, வரலாற்றில் இதேகாலகட்டத்தில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.
நாடளவில் தினமும் சராசரியாக 11468 பயணியர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது கடந்த ஆண்டை விட 630 ரயில்கள் அதிகமாகும். இவ்வாண்டில், ரயில்வே மற்றும் சுற்றுலாவின் ஒருங்கிணைப்பை ஊக்குவித்து, சேவை நுகர்வை விரிவுப்படுத்தும் புதிய நடவடிக்கைகளை பல்வேறு துறைகளும் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. நாடளவில் மொத்தம் 1797 சுற்றுலா பயணத்திற்கான ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. மேலும், சீன ரயில்வே குழுமம் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போட்டிகள் மற்றும் கண்காட்சிகளின் தேவைக் கிணங்க, பாடகரின் ரசிகர் மற்றும் விளையாட்டு ரசிகர் ரயில்கள் உள்ளிட்ட 445 தனிப்பயனாக்க ரயில்களை இயக்கியுள்ளது.
