இன்ஸ்டாகிராமில் 10 கோடி ஃபாலோயர்கள்! உலகிலேயே முதல் அரசியல் தலைவர்!  

Estimated read time 1 min read

பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் (10 கோடி) ஃபாலோயர்களை கடந்த முதல் உலக தலைவர் மற்றும் அரசியல்வாதி என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
2014-ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் இணைந்த பிரதமரின் பிரபலத்தன்மை, மற்ற முன்னணி உலகத் தலைவர்களை விடப் பல மடங்கு அதிகமாக உள்ளது என்பதை இது காட்டுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 43.2 மில்லியன் ஃபாலோயர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
அவரை தொடர்ந்து இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ (15 மில்லியன்), பிரேசில் அதிபர் லூலா (14.4 மில்லியன்), துருக்கி அதிபர் எர்டோகன் (11.6 மில்லியன்) ஆகியோர் உள்ளனர்.

You May Also Like

More From Author