பழனி கோயில் நிலங்கள் முறைகேடாக பத்திரப்பதிவு.. சார் பதிவாளர் சஸ்பெண்ட்

Estimated read time 0 min read

பழனி கோயில் நிலங்களை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பழனி தண்டபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில், கோவில் நிர்வாகம் சார்பில் சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. காவல்துறையினர் 4 நபர்கள் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, பழனி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று விசாரணை செய்தனர்.

விசாரணை ஒருபுறம் நடைபெற்றுவரும் நிலையில், பழனி கோயில் நிலங்களை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஜஸ்டின் மணிகண்டன் மீது பத்திர பதிவுத்துறை ஐஜி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author