சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங்கின் முக்கிய கட்டுரை, கட்சி உறுப்பினர் மற்றும் அதிகாரிகளிடையே பொறுப்பேற்பதை கால ஓட்டமாக மாறுவது என்ற தலைப்பில் ஜியூஷி இதழில் மார்ச் 1ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டில் உருவாக்கப்பட்ட மாபெரும் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக, பல்வேறு நிலையிலான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். புதிய பயணத்தில் பெரும் சவால்கள், இடர்கள், தடைகள் மற்றும் முரண்பாடுகளைச் சந்திக்கக்கூடிய நிலையில், அதிகாரிகளும் ஊழியர்களும் பொறுப்பேற்கும் விழிப்புணர்வைக் கொண்டிருக்க வேண்டும்.
அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொறுப்புணர்வுடன் சிறந்த முறையில் கட்சி மற்றும் பொது மக்களுக்குச் சேவை புரிய வேண்டும் என்று இக்கட்டுரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
