நாணயத்தின் உயர் தர வளர்ச்சியை முன்னேற்றுவது பற்றிய ஆய்வு வகுப்பின் துவக்க நிகழ்ச்சி 16ஆம் நாள் முற்பகல் நடைபெற்றது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் இதில் உரை நிகழ்த்தினார்.
சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த நவீன நாணய முறைமையை விரைவாக உருவாக்க வேண்டும் என்றும், சீரான நாணயக் கட்டுப்பாட்டு முறைமை, கட்டமைப்பு நியாயமான நாணய சந்தை முறைமை, ஒருங்கிணைந்த நாணய அமைப்பு முறை, முழுமையான பயன்மிக்க நாணய கண்காணிப்பு முறைமை, பலதரபட்ட தொழில் முறை நாணய பொருள் மற்றும் சேவை முறைமை, தற்சார்ப்பு, பாதுகாப்பு, பயன் மிக்க நாணய அடிப்படை வசதி முறைமை ஆகியவற்றை உருவாக்கி மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பொருளாதாரம் மற்றும் நாணயத்தின் உயர் தர வளர்ச்சியை ஒருங்கிணைந்து முன்னேற்றி, சீனப் பாணியுடைய நவீனமயமாக்கம் மூலம் வல்லரசு கட்டுமானத்தையும் தேசிய மறுமலர்ச்சி இலட்சியத்தையும் பன்முகங்களிலும் முன்னேற்றுவதற்கு மேலதிக பங்காற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.