ஜப்பானின் இராணுவமயமாக்கத்தை சீனா எதிர்ப்பது உலகின் நலனுக்குப் பொருந்தியது

 

ஜப்பானின் இராணுவமயமாக்கத்தில் ஈடுபட்டு வரும் குறிப்பிட்ட 20 ஜப்பான் நிறுவனங்களை ஏற்றுமதி கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்ப்பதாகவும், ஜப்பானைச் சேர்ந்த மேலும் 20 நிறுவனங்களை கண்காணிப்புப் பட்டியலில் சேர்ப்பதாகவும் சீன வணிக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

தொடர்புடைய தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் மிட்ஸுபிஷி கனரகத் தொழில் நிறுவனம், கவாசாகி கனரகத் தொழில் நிறுவனம் உள்ளிட்ட 5 ஜப்பானின் இராணுவ நிறுவனங்களின் மொத்த விற்பனை தொகை 1330 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. இது, 2023ஆம் ஆண்டின் இருந்ததை விட 40 விழுக்காடு அதிகரித்துள்ளது. இத்தகைய நிறுவனங்கள் ஜப்பானின் இராணுவமயமாக்கத்திற்கான முக்கிய ஆதரவுகளாக மாறியுள்ளன. தொடர்புடைய சட்டம் மற்றும் விதிகளின்படி, இவற்றின் மீது ஏற்றுமதி கட்டுப்பாட்டை வலுப்படுத்துவது என்பது ஜப்பானின் இராணுவமயமாக்கத்திற்கு வினியோகத்தைத் துண்டிக்கும் செயலாகும். அபாயத் தடுப்பதற்கான இந்நடவடிக்கைகள் மிகவும் அவசியமாக உள்ளன.

 

ஜப்பானின் மீது ஏற்றுமதி கட்டுப்பாட்டை சீனா நடைமுறைப்படுத்துவது, சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச நடைமுறைக்கு உட்பட்டதாகும். அந்நாட்டின் இராணுவமயமாக்க விரிவாக்கத்தில் ஈடுபடுகின்ற சில நிறுவனங்கள் மீது சீனா மேற்கொண்ட ஏற்றுமதி கட்டுப்பாடு சீனாவுக்கும் ஜப்பானுக்குமிடையில் இயல்பான பொருளாதார மற்றும் வர்த்த்க தொடர்புக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. சீனாவின் எதிர்ப்பு நடவடிக்கைகளானது, வரலாற்று படிப்பினையைப் பெற்று, சர்வதேச அணு ஆயுத பரவல் தடுப்பு கடமையை நிறைவேற்றுவதற்கான இயல்பான நடவடிக்கைகளாகும். நாட்டின் பாதுகாப்பைப் பேணிக்காப்பதோடு, இறையாண்மை மற்றும் வளர்ச்சி நலன்களையும் பாதுகாப்பதற்கு சீனாவின் நடவடிக்கைகள் உத்தரவாதம் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  

You May Also Like

More From Author