சிவகங்கை, ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு அமல்..!

Estimated read time 1 min read

மருதுபாண்டியர் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 27-ம் தேதி மருதுபாண்டியர் நினைவு தினமும், 30-ம் தேதி பசும்பொன்னில் தேவர் குருபூஜையும் நடைபெறுகின்றன. இதையொட்டி சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கையாக வரும் 20 முதல் 31 வரை BNSS 163-ன் கீழ் தடை உத்தரவு அமலில் இருக்கும் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் வரும் 27-ம் தேதி மருதுபாண்டியர் நினைவு தினமும், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் 30-ம் தேதி தேவர் குருபூஜையும் நடைபெற உள்ளன.இதனை முன்னிட்டு, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில், வரும் 20-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சிவகங்கை மாவட்டம் முழுவதும் BNSS சட்டப்பிரிவு 163-ன் கீழ் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author