தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Estimated read time 1 min read

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜயதசமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி அந்த அமைப்பின் மாநில செயலாளர் ஜெகதீசன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் ஜம்மு காஷ்மீரிலேயே RSS ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கப்படும்போது, அமைதி பூங்கா என சொல்லப்படும் தமிழ்நாட்டில் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என வினவியது.

மேலும், மசூதிகள் உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்களை காரணம் காட்டி RSS அணிவகுப்பிற்கு எப்படி அனுமதி மறுக்க முடியும் எனவும் அடுக்கக்கான கேள்விகளை எழுப்பியது.

இந்த வழக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. உயர்நீதிமன்ற விதிகளை பின்பற்றி மட்டுமே ஊர்வலம் நடத்தப்படும் என RSS தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, உயர்நீதிமன்ற உத்தரவுகள் இருந்தும் 2022ம் ஆண்டு முதல் ஊர்வலத்திற்கு அனுமதி கோரி RSS இயக்கம் தொடர்ந்து நீதிமன்றத்தை நாடும் நிலை இருப்பதை சுட்டிக்காட்டினர்.

மேலும், எதிர்வரும் காலங்களில் RSS அணிவகுப்பிற்கு அனுமதி வழங்க காவல்துறை மறுக்க மாட்டார்கள் என நம்புவதாக தெரிவித்தார்.

இதையடுத்து, அக்டோபர் 25 மற்றும் நவம்பர் 1ம் தேதி என இரு தினங்கள் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு ஆணையிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author