தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்தவர் தேவா. கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியான மனசுக்கு ஏத்த மன்னார் என்ற திரைப்படத்தின் மூலம் இவர் திரையுலகில் அறிமுகமானார். இவர் பல கானா பாடல்களை தானே எழுதி பாடியுள்ளார். இவரது இசையில் வெளிவந்த காத்தடிக்குது காத்தடிக்குது, திருப்பதி ஏழுமலை வெங்கடேசா, கவலைப்படாதே சகோதரா உள்ளிட்ட பல பாடல்கள் இன்றும் பிரபலம்.
இவர் தெறி படத்தில் பாடிய ஜித்து ஜில்லாடி பாடல் மிகவும் ஃபேமஸ். இவர் கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த சில்லு வண்டு திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இவருக்கு தற்போது 76 வயது ஆகும் நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு மாரடைப்பால் மரணம் அடைந்தார். மேலும் தேனிசை தென்றல் தேவாவின் மரணம் திரை உலகை உலுக்கியுள்ள நிலையில் ரசிகர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
